Priyanka chopra:உக்ரைன் போரால், போலந்து நாட்டுக்குச் சென்ற அகதிகளை சந்தித்த பிரியங்கா சோப்ரா.. கிளிக்ஸ்!
யுனிசெப் (UNICEF-ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) அமைப்பில் நீண்ட காலமாக பங்காற்றி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா,
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு, போலந்து நாட்டுக்குச் சென்று சிக்கித் தவித்து வரும் அகதிகளை சந்தித்துள்ளார்.
போரின் கண்ணுக்குத் தெரியாத காயங்களை நாம் பொதுவாக செய்திகளில் பார்க்க முடியாது. வார்சாவில் எனது யுனிசெப் பணியின் முதலாம் நாளை இன்று நான் தொடங்கியபோது எனக்கு அவை மிகவும் தெளிவாகத் தெரிந்தன.
UNICEF அமைப்பு இந்த அவசரநிலையை கையாளும் வகையில் போலந்து முழுவதும் 11 இடங்களிலும், அகதிகளுடன் இணைந்து பிராந்தியம் முழுவதும் 37 இடங்களிலும் புளூ டாட் மையங்களை (இடம்பெயரும் அகதிகளுக்கான மையங்கள்) அமைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் 150 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் உள்ளூர் பொருளாதாரம் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை ஆட்டம் கண்டுள்ளது.
உக்ரைனில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இங்கு எல்லையைக் கடக்கும் மக்களில் 90% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -