Photos | 215 எலும்புகூடுகள்.. உலகை உலுக்கிய சம்பவம்.. மர்ம பள்ளியின் புகைப்படங்கள்!
உலகையே உலுக்கிய 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கனடா பழங்குடியின பள்ளியின் அப்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் நுழைந்தபோது அங்குள்ள பழங்குடியினர் கொல்லப்பட்டதாக ஆய்வு கூறுகிறது
பிரிட்டிஷ் ஆட்சியில் பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன் கூடிய உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டன
1863 -1998, இந்த காலகட்டத்தில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் உறைவிட பள்ளியில் படித்தனர்.
பலர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு 2008-இல் உறைவிட பள்ளி முறை ஒழிக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அதனை உண்மை என உலகுக்கு கூறியது.
கம்லூப்ஸ் நகரில் உறைவிட பள்ளி இருந்த ஒரு இடத்தில் நடத்தப்பட்ட ரேடார் ஆய்வில் எலும்புக்கூடுகள் பூமிக்கு கீழ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உறைவிட பள்ளியில் படித்த சுமார் 6000-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம், என அங்குள்ள அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது
இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் இது ஒரு வேதனை என குறிப்பிட்டுள்ளார். (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)