'வாழ்க்கையே போர்க்களம்' - இடிந்த வீடுகளுக்கு நடுவே வாழ்ந்துவரும் காசா மக்கள்!
ஜெருசலத்தைத் தங்கள் பகுதியாக இஸ்ரேல் உரிமை கொண்டாடி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இஸ்ரேல் பாலஸ்தீனிய எல்லையான காசாவில் கடந்த 10 மே 2021 தொடங்கி போர் மூண்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹமாஸ் இஸ்ரேலிய எல்லையில் ராக்கெட்களை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனை ராக்கெட் குண்டுகள் கொண்டு தாக்கியது.
ம்ஜான் மாத நோன்பு கூடத் துறக்காமல் குண்டுச் சத்தங்களுக்கும் மரண ஓலங்களுக்கு நடுவே மக்கள் உயிரைக் கையில் பற்றிக்கொண்டு நடுக்கத்துடன் நாட்களைக் கடத்தி வந்தனர்.
எகிப்தின் தலையீட்டால் அந்தப் பகுதி மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியிருக்கிறது.
பேரழிவைச் சந்தித்துள்ள காசாவுக்கு மனிதநேய அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வந்துள்ளார்.
தற்போது இடிந்த வீடுகளில் மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்
உடைந்த வீடுகளாக இருந்தாலும் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு உறங்கி வருகின்றனர் காசா மக்கள்
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் அந்த நாட்டு மக்கள் கருத்து கூறிவருகிறார்கள் (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -