Kalpana Chawla : மண்ணில் தோன்றி விண்வெளியில் மறைந்த கல்பனா சாவ்லாவிற்கு இன்று பிறந்தநாள்!
கல்பனா சாவ்லா 17 மார்ச் 1962ல் பிறந்தார். பள்ளி படிப்பை கர்னல் மாவட்டத்தில் முடித்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் பயின்றார்.அவர் 1982 இல் அமெரிக்காவிற்குச் சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் கொலொரடொ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகல்பனா 1988 இல் நாசா எய்ம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியத் தொடங்கினார், மேலும் 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா குடியுரிமை பெற்ற பிறகு கார்ப்ஸில் இனைந்தார்
1997ல் விண்வெளி சென்றதில் முதல் இந்திய வம்சவழி பெண் இவர்
2000 ஆம் ஆண்டில், கல்பனா, STS-107 குழுவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பணி மீண்டும் மீண்டும் தாமதமாகி, இறுதியாக 2003 இல் ஏவப்பட்டது. பிப்ரவரி 1, 2003 அன்று, பூமிக்கு திரும்பும் போது விண்வெளி விண்கலம் டெக்சாஸில் சிதைந்தது. இந்த குழுவினர் 80க்கும் மேற்பட்ட சோதனைகளை முடித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
கல்பனா சாவ்லா மரணத்திற்குப் பின் காங்கிரஸின் ஸ்பெஸ் மெடல் ஆப் ஹானர், நாசா ஸ்பெஸ் ப்ளைட் மெடல், நாசாவின் சிறப்பு மிக்க சேவைப் பதக்கங்களால் கௌரவிக்கப்பட்டார்.
கல்பனா சாவ்லா தனது வாழ்நாளில் மொத்தம், 30 நாட்கள், 14 மணி நேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -