Abu Dhabi Temple : அபுதாபி இந்து கோயிலில் வழிப்பட்ட இந்திய பிரதமர் மோடி!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் மந்திர் (BAPS),அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயண் (கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது), திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
நேற்று மாலை பிரதமர் மோடி இந்த கோவிலை திறந்து வைத்தார்.“இந்த கோவிலின் திறப்பு விழா பல வருட கடின உழைப்பு மற்றும் பலரின் கனவுகளால் இணைக்கப்பட்டுள்ளது. சுவாமிநாராயணின் ஆசீர்வாதமும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.” என பேசினார்.
கோயில் வளாகத்தை சுற்றி வந்து, அவர் சார்பில் அங்குள்ள மூலவருக்கு பூஜையும் செய்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு வந்த அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும், மேலும் அவர்களுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் தொடர்பும் அதிகரிக்கும். இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் சார்பில், ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், ஐக்கிய அ எமிரேட் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - பிரதமர் மோடி