Japan's Ex-Princess Mako: ”விடைகொடு சாமி விட்டு போகின்றேன்” - கணவருடன் அமெரிக்கா பறந்த முன்னாள் ஜப்பான் இளவரசி மகோ
ஒரு சாமானியரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதால் அரச குடும்ப பட்டம் இனி தனக்கு வேண்டாம் என சொல்லியதோடு அரசு குடும்ப மரபுப்படி தனக்கு அளிக்கவிருந்த பல கோடி ரூபாயையும் நிராகரித்தவர் ஜப்பான் இளவரசி மகோ.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார்.
ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.
இந்த பணத்தை வேண்டாம் என சொல்கிற முதல் இளவரசி மகோதான். இதற்குமுன் அந்த குடும்பத்தில் யாரும் அவ்வாறு சொல்லியதில்லை.
மகோ, ஒரு சாமானியரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு வாரிசுகள் பிறந்தால் அவர்களும் அரசக் குடும்பத்தின் வாரிசுகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச கும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் மகோ பயன்படுத்த மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண வாழ்க்கையை தொடங்க மகோவும், அவரது கணவரும் அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -