Hiroshima Day 2021: ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சின் 76வது நினைவு தினம் இன்று
1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்ந்தன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக கூறி அமெரிக்கா இந்த படுகொலையை நியாயப்படுத்தியது.
குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள்
இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்
இந்த அணுகுண்டு வீச்சால் பாதிப்படைந்தவர்கள் பெரும்பாலானோர் பொது மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது
ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy)
மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர்
இரண்டாம் உலகப் போருக்குப் பின், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது. அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது. அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது என்ற அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்களை ஜப்பான் தனக்கென்று வகுத்துக்கொண்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -