Twitter Logo: ‘இவரு அலப்பரை தாங்க முடியலப்பா..’ ட்விட்டர் பறவையை நாய் உருவமாக மாற்றிய எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர், எலான் மஸ்க்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆரம்பம் முதலே ட்விட்டர் தளத்தில் பல்வேறு அம்சங்களை மாற்றிக்கொண்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு, ட்விட்டர் கணக்கு வைத்திருப்போருக்கு ப்ளூ டிக் வேண்டுமென்றால், அவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
எலான் மஸ்க், ட்விட்டர் பயன்படுத்துவோர் மட்டுமன்றி பலர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு செயலை செய்துள்ளார்
ட்விட்டரின் லோகாேவை, லேரி தி பர்ட் (Larry the bird) என்ற பறவையிலிருந்து டாட்ஜ் (Doge) என்ற நாய் உருவமாக மாற்றியுள்ளார்.
இது குறித்த மீம்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன
இந்த டாட்ஜ் என்ற நாய், பல மீம்ஸ்களில் டெம்ப்ளேட்டாக உபயோகிக்கப்பட்டுள்ளது
முன்னர் இருந்த பறவை லோகோவையும் இப்போது இருக்கும் லோகாேவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலர், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்
அப்படிப்பட்ட மீம்ஸ்களில் இதுவும் ஒன்று
முன்னரெல்லாம் ஃபேஸ்புக் லோகாேவுடன் ட்விட்டர் லோகாே போட்டி போட்டு வந்தது, இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது
எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்பதற்கு முன்னர், அவரிடம் ஒருவர் ட்விட்டர் தளத்தை வாங்குமாறும், பின் ட்விட்டரின் லோகோவை மாற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் கோரிக்கையை அப்படியே இப்போது நிறைவேற்றியுள்ளார், எலான் மஸ்க்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -