Danish Siddiqui Last Photos: டேனிஷ் சித்திக் கடைசியாக ‛கிளிக்’ செய்த போட்டோக்கள்!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் போக்கு கடந்த சில தினங்களாக தீவிரமாக உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராய்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக புகைப்பட பத்திரிகையாளராக டேனிஷ் சித்திக் கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கி செய்திகளை சேகரித்து வந்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் அமைந்துள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ படைகளுக்கும், தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது
மோதலில் அங்கே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டேனிஷ் சித்திக் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்
கடந்த சில தினங்களாக ஆப்கானில் தாலிபன்கள் முன்னேறிவருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்தார்.
கந்தகாரில் தலிபான் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதை அவர் மிகவும் நெருக்கமாக படம்பிடித்து இருந்தார்.
அவர் உயிரிழந்ததை இந்தியாவிற்கான ஆப்கான் தூதர் பரீத் மமூன்த்ஷே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -