வேலூர் : இன்று முதல் பள்ளி, கல்லூரி திறப்பு : மாணவர்கள் உற்சாகம் !
வேலூர் காட்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்படுகின்றது
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் காட்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வழுத்தகளை தெரிவித்தார்
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு எடுக்கும் விரிவுரையாளர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பஸ்கள் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்குமுதல் நாளான இன்று மாணவர்களுக்கு வெப்ப நிலை சோதனை நடத்தப்படுகின்றது
பஸ்களில் மாணவ-மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து படிக்கும் பள்ளி வரை சென்று வர கட்டணமின்றி பயணிக்கலாம்
வேலூர் ஆக்ஸிலியும் பள்ளியில் மாணவர்கள் பெயர்கள் வகுப்புவாரியாக சரிபார்க்கப்படுகின்றது
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன.
பள்ளிக்கு வருபவர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இதில் 9-ம் வகுப்பில் 21,039 மாணவ- மாணவிகளும், 10-ம் வகுப்பில் 20,516 மாணவ- மாணவிகளும், 11-ம் வகுப்பில் 16,588 மாணவ- மாணவிகளும், 12-ம் வகுப்பில் 17,607 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 75,750 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டத்தில் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள ஜெய வாசவி தனியார் பள்ளியில் இன்று 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு விதிமுறைகளுடன் பள்ளி திறக்கப்பட்டது அடுத்த முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்போதுதான் வேகவேகமாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து வருகின்றனர்.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ளே வரும் மாணவிகளுக்கு வெப்பநிலை சோதிக்கப்படவில்லை கிருமிநாசினியும் அளிக்கப்படவில்லை