நெருப்பே இல்லாமல் பால் பொங்கும்.. விமரிசையாக நடந்த நெல்லை நூதன மதுக்கொடை விழா!
நெல்லை சந்திப்பு அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ளது உலகம்மன் கோவில்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த கோவிலில் உலக அம்மன் சியாமளா தேவி அம்மன் புது அம்மன் ஆகிய முப்பெரும் தேவைகளுக்கான கொடை விழா கடந்த 23ஆம் தேதி கால்நாட்டுடன் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
இக்கோவிலின் முக்கிய நிகழ்வாக மது கொடை விழா நடைபெறும்..
அதாவது பச்சரிசி மற்றும் நவதானியங்களை தண்ணீரில் ஊறவைத்து மண்பானையில் வைத்திருப்பர்..
பின்னர் அந்த பானைக்கு உள்ளே சாம்பிராணி புகைகளை அடைத்து வாழை இலையில் நெல்மணிகளை பரப்பி அதன் மேல் வைத்து விடுவர்
அதன் பின்னர் அந்த பானைக்குள் பாலை ஊற்றும் பொழுது நெருப்பே இல்லாமல் பால் பொங்கி வழிவதை காண முடியும்..!
தங்கள் பகுதியில் துர்மரணங்கள் மற்றும் தீமைகள் நடைபெறாமல் இருப்பதற்காக மகிஷா சூரனுக்கு இந்த மதுக் கொடை கொடுக்கப்படுகிறது என்பது ஐதீகம்
இந்த நூதன வழிபாட்டிற்காக திருக்கோவில் ஓதுவார் மூர்த்தி அம்மனுக்கு விரதம் இருந்து காப்பு கட்டி இந்த மதுக்கொடை நிகழ்வை நடத்துகிறார்கள்
இந்த விழாவில் முப்பெரும் தேவிகளும் மூன்று சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் செய்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -