Pongal 2024 : காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடியில் அலை கடலென திரண்ட மக்கள்!
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் வந்து செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மாவட்ட சுற்றுலாத்துறை, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட இசை பள்ளி மாணவ மாணவியர்களின் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவு கோட்டை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமானது திருவிழா போல் காட்சி அளித்தது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தை மாதப்பிறப்பை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற காலங்கள் தொடர்ந்து நடந்தது.
அதேபோல், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடந்தது.
மாலையில், சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு நடந்த பரிவேட்டை வேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர், சுவாமி ரதவீதி சுற்றி சன்னதித்தெரு வழியாக கோயிலை சேர்ந்தார். நேற்று திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -