Smallest Quran : அடடே இவ்வளவு சிறிய குர்-ஆனா? அதிர்ச்சியில் இந்திய தொல்லியல் துறையினர்!
மயிலாடுதுறை அருகே அரபி மொழியில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த மிகவும் சிறிய அளவிலான குர்-ஆனை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரை சேர்ந்தவர் 61 வயதான அமீனுல்லா. இவர் வீட்டில் மிகவும் பழைமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட மிகவும் சிறிய அளவிலான குர்ஆன் ஒன்றும் சிறிய அளவிலான மெட்டல் பாக்சில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
தங்களது மூதாதையர்கள் காலத்தில் இருந்து இருக்கும் இந்த குர்ஆன் குறித்து ஆய்வு செய்து எந்த நூற்றாண்டை சேர்ந்தது இதன் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டுமென்று அமீனுல்லா குடும்பத்தினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், தொல்லியல்துறையினர் இதனை கண்டுகொள்ளாததால் அவர் நீதிமன்றத்தை நாடினார்.
சென்னை மியூசியத்தின் டாக்டர் கண்ணன் என்பவர் ஜெய்புனிஷா என்பவரின் ஆராய்ச்சியைக் கொண்டு இந்த குர்-ஆன் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்திய தொல்லியல்துறை சான்று வழங்கியது.
300 ஆண்டுகளுக்கு மேல் இந்த குர்-ஆனை தங்கள் குடும்பத்தினர் பாதுகாத்து வருவதால், இதன் வயது அதிகமாக இருக்கும் என்பதால் இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமென்ற தேடலில் அவர்கள் உள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -