MK Stalin : 'எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு....' ஜப்பானில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் !
சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. கே.சண்முகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்
சிங்கப்பூர் நாட்டில் தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு. நோபுஹிகோ யமாகுஜி அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -