Lokesh Kanagaraj : லியோவிற்கு பின் சூர்யாவுடன் இணைகிறாரா லோக்கி?
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் பிஸியாக இருக்கிறார் .
லியோ படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரில்லர் படமான “இரும்பு கை மாயாவி”படத்தை இயக்குவார் என்ற தகவல் பரவிவருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்று விழா ஒன்றில் பேசினார் லோகேஷ் கனகராஜ். மேலும் சூர்யாவுக்காக இந்த ஸ்கிரிப்டை எழுத 5 ஆண்டுகள் ஆனதாகவும் கூறினார்.
விபத்தில் தன் கையை இழக்கும் கதாநாயகனுக்கு, அறுவை சிகிச்சையின் போது இரும்பு கை பொருத்தப்படுகிறது. திடீரென்று ஒரு நாள், கதாநாயகனின் உடலில் மின்சாரம் பாய்வதனால், அவனுக்கு மற்றவர்களை மாயமாக்கும் சூப்பர் பவர் கிடைக்கிறது என்று, லோக்கியின் ரசிகர்கள் இரும்பு கை மாயாவின் திரைக்கதையை யூகித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரோலக்ஸ்தான் இரும்பு கை மாயவி, இப்படமும் எல்.சி.யூவில் ஒரு அங்கம் என்று சிலர் உறுதிப்படுத்தாத தகவல்களை பரவிவருகின்றனர்.
இவையெல்லாம் உண்மையாகவே படமாக எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதே சினிமா ரசிகர்களின் கருத்து.