Sivaji Photo Gallery : செவாலியர் சிவாஜியும் - தமிழக அரசியலும்
சிவாஜி கணேசனின் இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' எனும் சிறுகதை நாடகத்தில் நடித்தார். மராட்டிய மன்னன் சிவாஜி, தற்போது உயர்சாதி இந்துக்களின் கதாநாயகனாக பார்க்கப்படுகிறார். ஆனால், அண்ணா தனது நாடகத்தில், சூத்திரன் என்ற சாதிய வகைப்பாட்டால் சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொள்ள முடியவில்லை என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்
திராவிட நிலப்பரப்பின் கதாநாயகனாக அண்ணா சிவாஜி மன்னனை மீட்டெடுத்தார். திராவிட அரசியல் பற்றிய கற்பனையை தமிழகத்தில் விதைத்தது இந்த நாடகம் தான்.
இந்த நாடகத்த்தைக் கண்ட பெரியார், கணேசமூர்த்திக்கு சிவாஜி' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த 'பராசக்தி' திரைப்படத்தில் திராவிட அரசியலின் ஆதங்கத்தையும், கோட்பாடுகளையும் சிவாஜி கணேசன் மக்களுக்கு விளக்கினார்
எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரின் வளர்ச்சியிலும் கலைஞரின் வசனம் முக்கியத்துவம் பெறுகிறது. 'அஞ்சாமை திராவிட உடமையடா' என்று கூறிய எம்.ஜி.ஆர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார். மத்திய அரசு அவருக்கு 'பாரத் ரத்னா' பட்டம் அளித்து கவுரப்படுத்தியது.
சிவாஜியின் பிற்கால திரைப்படங்களில் பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் போன்ற அகம் சார்ந்த விசயங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் போர், அறநெறி, மொழி போன்ற புறஅரசியலை பேசத் தொடங்கினார்
திராவிட அரசியல் கதாநாயகனாக இருந்த சிவாஜி, பிற்காலத்தில் தன்னைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். இது, தமிழக அரசியலில் விளக்கமுடியாக முரண்பாடுகளில் ஒன்றாகும்
மத்திய அரசு 'எம்.ஜி.ஆர் தேசியமயமாக்கியது (அஞ்சல் வெளியீடு, பாரத் ரத்னா விருது). ஆனால், தேசிய சித்தாந்தத்தை முன்னெடுத்த சிவாஜியை மீண்டும் தமிழக நிலபரப்புக்குள் கொண்டு வந்தவர் கலைஞர். மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அடுத்து, சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை அமைத்தார்
70களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உருவாக்கிய வெற்றிடத்துக்குப் பிறகுதான், திரைப்படங்களில் கதாநாயகன் ஆண்மைத்தனம் இல்லாதவனாகவும்,உடல் குறைபாடு கொண்டவனாகவும் சித்தரிக்கப்பட்டான். 16 வயதினிலே,ரோசாப்பூ ரவிக்கைகாரி, பூட்டாத பூட்டுகள், கன்னிப் பருவத்திலே போன்ற பல்வேறு திரைப்படங்களில் பெண் கதாபாத்திரம் நாயகனை விட முக்கியத்துவம் பெற்று விளங்கும்.
தென்னிந்தியாவின் மார்லன் பிராண்டோ சிவாஜி என்றால், ஹாலிவுட்டின் சிவாஜி ' மார்லன் பிராண்டோ'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -