Modi Chennai Visit: சென்னை விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு!
பிரதமர் மோடி நேற்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.
இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சென்னை விமான நிலையத்தில், மேலும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ளது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு, 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முனையத்தின் கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில், சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக, பயணியருக்கான, வழக்கான நடைமுறைகள் கையாளப்படும்.
தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் இந்த சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டன.
தமிழக அரசின் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இவ்விழாவில், பல முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -