Vande Bharat சென்னையில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்..பயணிகளையும் சந்தித்து பேசினார்!
சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரதமரைக் காண, திரளான மக்கள் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர்
வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தவுடன், பிரதமர் மோடி ரயில் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.
இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் உட்பட 8 பெட்டிகள் உள்ளது. 530 பேர் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே 495.28 தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் முக்கிய வணிக மற்றும் நகர்ப்புற மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -