1,600 கிலோ ஆடு,பன்றி கறி விருந்தில் 7,000 பேர்: நாமக்கல் போதமலை கருப்பனார் கோயில் விழா படங்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாமகரிப்பேட்டை அருகே உள்ள ஆர். புதுப்பட்டியில் போதமலையில் கள்ளவிழி கருப்பனார் கோயில் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇக்கோயிலில், தை மாதம் கடைசி ஞாயிறு முப்பஜை விழாவானது பாரம்பரியாக உள்ளது. இவ்விழவானது, சுமார் 300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று மாலை தொடங்கிய இவ்விழாவில், 28 ஆடுகள், 28 பன்றிகள், 29 சேவல்கள் நேற்று சமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மலையில் உள்ள கோயிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபடுவதாகவும், பெண்கள் செல்லமாட்டார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மலையில் உள்ள கோயிலில் வெட்டப்பட்ட ஆடுகள் , பன்றிகள் மற்றும் சேவல்களை சாமிக்கு பலியிட்டு, அதைக் கீழே கொண்டு வந்து சமைத்து, ஆண்கள் - பெண்கள் என அனைவரும் சேர்ந்து சாப்பிடுவர்.
இக்கோயிலில் 28 ஆடுகள், 28 பன்றிகள், 29 சேவல்கள் என சுமார் 2,500 கிலோ கறி சமைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. இவ்விழாவில், சுமார் 7,000 பேர் வரை உணவு அருந்தி, விழாவை சிறப்பித்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -