Maha Kumbh: மகா கும்பமேளா - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல் - புகைப்படங்கள்!
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்இதுவரை 43 கோடிக்கும் அதிகமாக மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புனித நீராடுவதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரயாக்ராஜ் நகர் வந்தார். அவரை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றன
திரெளபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின், திரெளபதி முர்மு,தொடர்ந்து அனுமன் மந்திர் சென்று வழிபாடு செய்தார்.
தொடர்ந்து, திரிவேணி சங்கமம் வந்த அவர், அங்கிருந்த பறவைகளுக்கு உணவு வழங்கினார்.