HBD Udhayanidhi Stalin: பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி..!
சினிமா மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக திகழும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉதயநிதி ஸ்டாலினுக்கு அறிமுகம் என்பது தேவையே இல்லை. மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பேரனாகவும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் அறியப்பட்டார் உதயநிதி
தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள் என்ற புத்தகத்தை முதலமைச்சருக்கு வழங்கி வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.
பிறந்தநாளையொட்டி பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -