ஆழிப்பேரலையின் 18 வது நினைவாண்டு ... கடற்கரையை கண்ணீரால் நிரப்பும் மக்கள்!
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுமார் 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பலமாக தாக்கியது.3. சுமார் 2,29,866 பேர் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 43,786 பேர் காணாமலே போயினர்.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் சுனாமி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டன.இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்த நிலையில், அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தார்கள்.
சுனாமி ஆழிப்பேரழிவின் 18-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது
இதுபோன்ற பேரிழப்பு இனி வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டு, மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு பல இடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
மக்கள் ஆங்காங்ககே மெழுகுவர்த்தி ஏந்தியும், கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -