Vaikunta Ekadasi 2023 : தமிழகமெங்கும் விமரிசையாக நடந்த வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா!
சேலம் கோட்டை அழகிரிநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கூடி பெருமாளை தரிசனம் செய்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவிலின் கருவறை பின்புறம் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் மனியம்பாடி வெங்கட்டரமன சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தருமபுரி கோட்டை அருள்மிகு வரலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் சுவாமி திரு கோயிலில் அதிகாலை மணி 5.30 க்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீவர மகாலட்சுமி சமேத பரவாசு தேவர் சொர்க்க வாசலில் எழுந்தருளி தூப தீப நைவேத்தியம் செய்து சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது பரமபத வாசல் வழியாக சாமி புறப்பாடு நடந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அளித்தார்.
வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் ரங்கநாதர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். கரூர் பண்டரிநாதன் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரி நாதன் சுவாமி ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சுவாமி பரம பத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -