MP Kanimozhi Rescue : தூத்துக்குடியில் பெரும் வெள்ளம்..மீட்பு பணியில் களமிறங்கிய எம்.பி கனிமொழி!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபோக்குவரத்து பிரச்சினை, மின் தடையினால் அங்குள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேருந்தில் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, பொதுமக்கள் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க படகுகளை ஏற்பாடு செய்து வெள்ளப்பாதிப்புகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகிறார்.
மக்கள் பலரும், எம்.பி. கனிமொழியின் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -