Exclusive Photos : கீழடி அருங்காட்சியகத்தில் சங்ககால பொருட்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த முதல்வர்!
3 நாட்கள் பயணமாக மதுரைக்கு சென்றுள்ள முதல்வர், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅங்கு, பழந்தமிழர் நாகரிகம் குறித்து வைக்கப்பட்டிருந்த விளக்கப்படங்களை முதல்வர் பார்வையிட்ட காட்சி
தமிழ்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகம் குறித்து பாராட்டிப்பேசியதாக கூறினார்
மேலும், பழங்கால தமிழர்களின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் தத்ரூபமாக அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்
இந்த அருங்காட்சியகம், மொத்தம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் ஆறு பிரிவுகள், வைகை மற்றும் கீழடி, விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை, கடல் வர்த்தகம், நெசவு மற்றும் மணி சார்ந்த தொழில்கள், பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை மற்றும் பீங்கான் தொழில் ஆகியவை ஆகும்.
கீழடி அருங்காட்சியகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் புகுத்தப்பட்டுள்ளன
அப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றுதான், (Virtual Reality). இதில், நம்முடைய பெயரை டைப் செய்தால், அந்த கால தமிழ் பிராமி மொழியின் எழுத்தில் நம் பெயர் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்
முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சி
அருங்காட்சியகத்தில் தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறையை முதல்வர் பார்வையிட்டார்
கீீழடியில், நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
முதல்வரின் அருங்காட்சியக விசிட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -