Jayalalithaa | கருப்பு வெள்ளை காலத்து ஜெயலலிதா.! நினைவு கிளறும் புகைப்படங்கள்!
ஜெயலலிதா எனும் ஆளுமை 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ல் பிறந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி தம்பதியருக்கு மகளாக பிறந்தார்
இவரது இயற்பெயர் கோமளவல்லி. இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.
திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.
சென்னைக்கு வந்த பின்னர், ஜெயலலிதாவிற்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதனால் படிப்பைக் கைவிட்டு நடிகையானார்.
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -