Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை மறுநாள் (22.10.25)மின் தடை.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா? முழு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை (22.10.2025) மின்வாரியம் சார்பில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டில் மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, மின்தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெரியாண்டிபாளையம்: ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
பெருந்துறை : சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
பராமரிப்புக்காக திட்டமிடப்பட்ட மின் தடைக்கு முன்னதாக, சிரமத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படுவதற்கு முன்பு மக்கள் தங்கள் மொபைல் போன்கள், பவர் பேங்குகள் மற்றும் பிற அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்திருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் மின்சார பம்புகள் செயல்படாமல் இருக்கும் என்பதால், வீடுகளில் போதுமான குடிநீர் மற்றும் வீட்டு நீரை சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்