Eid 2023 : ‘எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி..’தமிழ்நாடெங்கும் கலைக்கட்டும் ஈகைத் திருநாள்!
இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடைபெற்றது.
பாண்டிச்சேரியில் உள்ள புரோமனேட் கடற்கரைக்கு அருகே தொழுகை செய்த இஸ்லாமிய சகோதரர்கள்.
சேலத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சூரமங்கலம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நேற்று ஷவ்வால் முதலாம் பிறை பார்த்து இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி திண்டுகல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நத்தம், அசோக் நகர், அண்ணா நகர், முஸ்லீம் மேற்குத் தெரு ,கிழக்குத் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலைச் சேர்ந்த ஜமாத்தார்கள் ஒன்று கூடி தக்பீர் ஓதி கோரிமேடு மைதானத்தை சென்றடைந்தனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.ஆண்கள், பெண்கள் சுமார் 4000 பேர் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ரமலான் தொழுகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.