TN Breakfast Scheme : ‘சாப்பாடு எங்கள் பொறுப்பு..படிப்பு உங்கள் பொறுப்பு..’ காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காலை உணவு திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அத்தோடு காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்து உள்ளது தெரிய வந்ததை அடுத்து இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -