Guindy Multi Speciality Hospital : உலக தரத்தில் கட்டப்பட்ட கிண்டி பல்நோக்கு மருத்துவமனை.. திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகலைஞர் நூற்றாண்டு விழா நினைவாக ரூ.250 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
1000 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளன.
6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், 10 லிஃப்ட்டுகள், உணவகங்கள் என நவீன வசதிகளுடன் கட்டப்பட்டள்ளது.
‘2022 மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மாபெரும் மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது’ என ட்வீட் செய்துள்ளார். இந்த மருத்துவமனையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -