Anna | அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் சிறப்பு ஆல்பம்!
1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் நாள், காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பத்தில் பிறந்தார் அண்ணா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக்கொண்டது.
பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்த அண்ணா, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து, ஆறு மாதங்கள் பணியாற்றினர்.
1928-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகை பெற்று பி.ஏ படித்தார்.
1930-ம் ஆண்டு இராணி அம்மையாரை வைதீக முறையில் திருமணம் செய்துகொண்டார்.
1934-ம் ஆண்டு பி.ஏ ஹானர்ஸ் படித்து எம்.ஏ பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார் அண்ணா.
கன்னிமாரா நூலகம் போன்ற நூலங்களில் அண்ணா படிக்காத நூல்களே இல்லை என்று கூறப்படுவதுண்டு.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -