சேலத்தில் புத்தகத் திருவிழா...ஆர்வமாக பார்வையிடும் அரசு பள்ளி மாணவர்கள்!
சேலம் புத்தகத் திருவிழா 2023 சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா 2023 தொடங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநவம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த புத்தக கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழாவினை இன்று 20,000க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
இதற்காக அரசு போக்குவரத்து துறை சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -