Udhayanidhi on NEET : அப்போ செங்கல் இப்போ முட்டை..அமைச்சர் உதயநிதி செய்த புது சம்பவம்!
அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் என அனைவரும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி திமுக அரசு அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கிற்காக திமுக குரல் கொடுத்து வருகிறது.
சமீபத்தில் கூட ஆகஸ்ட் 20ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து தற்போது, நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவர் அணி செயலாளர் எழிலன், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நீட் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கத்தை திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இருந்தாலும், இதை மாபெரும் மக்கள் இயக்கமாகத்தான முன்னெடுத்து செல்ல வேண்டும். நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாக குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் நீட் தற்கொலைகள் தொடர்கிறது. நீட் வந்தால், தரமான மருத்துவர்கள் வருவார்கள். படிப்புக்கு பணம் தேவையில்லை என்று சொன்னார்கள். ஆனால் தற்போது, முதுநிலை நீட் சேர, 0 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமாம். இதுதான் நீட் தேர்வின் நிலை”எனக் கூறி, முட்டையொன்றை கையில் காண்பித்தார் உதயநிதி.
முன்னதாக முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை என செங்கலை காட்டி ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை என செங்கல்லை காட்டி ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.