Karnataka Elections 2023 : முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்..யார் வேண்டுதல் பளிக்க போகிறது?
கடந்த மார்ச் 29 ஆம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பல நாட்களாக பிரச்சாரம் நடைப்பெற்றது. மே 10 ஆம் தேதி வெற்றிகரமாக கர்நாடக தேர்தல் நடந்து முடிந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமே 13 ஆம் தேதியான இன்று, கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஹூப்ளியில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு சென்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பிரார்த்தனை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியும், கர்நாடகா சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிம்லாவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.
சிம்லாவில் உள்ள ஜக்கு ஹனுமான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பிரியங்கா காந்தியின் புகைப்படம்.
தற்போது, 224 தொகுதிகளில் 118 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் நடனமாடி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -