Politicians as Marvel Characters: இந்த ஏ.ஐ ஓட அட்டகாசம் தாங்கல.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல் தலைவர்கள்!
ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் மார்வெல். இவர்களின் தயாரிப்புகளில் வெளிவந்த படங்களிலே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கதாபாத்திரங்களாக உலா வருவது அவெஞ்சர்ஸ் கதாபாத்திரம். இந்த நிலையில், தனியார் அரசியல் ஆலோசக நிறுவனம் ஒன்று இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை உலகப்புகழ்பெற்ற மார்வெல் கதாபாத்திரங்களாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅயர்ன்மேன் கதாபாத்திரமாக இந்திய பிரதமர் மோடியை சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதன்கீழே இந்திய அரசியலின் இரும்பு மனிதர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமாக சித்திரத்துள்ளனர். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அரசியலின் உறுதியான பாதுகாவலன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அயர்ன்மேனின் செல்லப்பிள்ளையாக உலா வரும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அரசியலின் பீட்டர்பார்க் என்று ராகுல்காந்தியை சித்திரித்துள்ளனர். இந்தியாவின் பீட்டர் பார்க்கர் தேர்தல் நாயகன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவெஞ்சர்ஸ் சீரிஸ் போலவே மிக பிரபலமான திரைப்பட வரிசை எக்ஸ் மேன் சீரிஸ் படங்கள். அதில் வரும் ப்ரொபசர் எக்ஸ் கதாபாத்திரமே அனைவரையும் வழிநடத்தும் தலைவராக இருப்பார். இந்திய அரசியலில் ப்ரொபசர் எக்ஸ் –ஆக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளார். நிதிஷ்குமார் இந்திய அரசியலின் தெளிவான கட்டுப்பாட்டாளர் என்று புகழ்ந்துள்ளனர்.
இந்திய அரசியலின் ஆன்ட் மேனாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சித்தரித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய அரசியலின் வடிவத்தை மாற்றுபவர் என்று கூறியுள்ளனர்.
மாபெரும் ஆற்றலை கொண்ட கதாபாத்திரமாகவும் எப்பேற்பட்ட அசுர தீய சக்திகளையும் அழிக்கும் சக்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் கேப்டன் மார்வெல். இந்திய அரசியலின் கேப்டன் மார்வெல்- ஆக பிரியங்கா காந்தியை குறிப்பிட்டுள்ளனர். அரசியலின் ஒளிரும் ஆற்றல் மிக்கவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -