Erode Election : ஈரோட்டில் பரபரப்பு பிரச்சாரம் செய்த முதல்வர்..கடலென திரண்ட மக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பரப்புரை ஓய்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குறைதீர் மனுக்களை கொடுத்தனர்
அப்போது ஸ்டாலின், “உங்களைத் தேடி வந்திருக்கிறோம். உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்களிடம் கை சின்னத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்” என்று தனது பேச்சை ஆரம்பித்தார்
பிறகு, ”முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிக்கிற இளங்கோவனை கைச்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும்” எனக்கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் பள்ளிப்படிப்பை முடித்தது ஈரோட்டில்தான். கலைஞர் கல்லூரிபடிப்பை முடித்தது காஞ்சிபுரத்தில்தான். அப்படிப்பட்ட வரலாறு நிறைந்த இந்த ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கை சின்னத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களைத் தேடி வந்திருக்கிறேன்” என்றார்
தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என சர்ச்சை எழுந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் ஒன்றை கொடுத்தார்
ஈரோடு இடை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “ தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஆட்சிக்கு வரும்போது இதையெல்லாம் எங்களுக்கு செய்து தர வேண்டும் என்றும், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் அதையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீங்கள் வாக்களித்தீர்கள், நீங்கள் நம்பிக்கையுடன் உள்ளீர்கள்” எனக் கூறினார்
'தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டுகாலத்தில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால் மிகப்பெரிய பட்டியலை எடுத்துச்சொல்ல வேண்டும்” என ஸ்டாலின் தனது பரப்புரையின் போது கூறினார்
மேலும் பேசிய அவர், “சொன்னதைச் செய்வோம். செய்வதை சொல்வோம் என்பர். அதைத்தான் நான் இங்கு வழிமொழிகிறேன். அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்பதை உங்களிடம் என்னால் காட்ட முடியும்” என்றார்
ஸ்டாலினின் உரைக்கு மக்கள் கரகோஷம் எழுப்பி தங்களது ஆதரவினை தெரிவித்தனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -