PM Modi : கையில் மயிலிறகுடன் அரபிக்கடலுக்குள் டைவ் செய்த பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பிரதமர், ஆன்மிக தளங்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகிறார்.
இதனையடுத்து பிரதமர், காவி உடை அணிந்து படகில் அரபிக்கடலுக்குள் பயணித்தார்.
அடுத்ததாக துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் பகுதியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் டைவ் செய்து மயிறகு வைத்து பூஜை செய்துள்ளார்.
பூஜை செய்துவிட்டு வெளியே வந்த பிரதமர் “நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலமற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் கடலுக்குள் மூழ்கி பூஜை செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -