CM Stalin : சிங்கப்பூரின் முக்கியஸ்தர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅமைச்சர்கள் திரு. துரைமுருகன், திரு. கே.என்.நேரு, முனைவர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர்.பாலு, திரு. கௌதம் சிகாமணி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய நிர்வாகிகள் திரு. ஜெயக்குமார், திரு. பத்மநாதன் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. சஞ்சீவ் தாஸ்குப்தாவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. கிம்யின் வாங்கை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்த போது.
இன்று வரை சிங்கப்பூரில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து மே 25-ல் ஜப்பான் செல்கிறார். அங்கு 6 நாட்கள் வரை தங்கியிருக்கும் அவர், மே 31-ல் சென்னை திரும்புவார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -