CM Stalin Birthday : 70 வது பிறந்தநாளில் மாபெரும் பொதுக்கூட்டத்தை வழிநடத்திய முதல்வர் ஸ்டாலின்!
மார்ச் 1 ஆம் தேதியான நேற்று, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
காலையிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சில அரசியல் தலைவர்கள், முதல்வரை நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, நேற்று மாலை முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைப்பெற்றது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட்ட வெளிமாநில தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்
“உடன்பிறப்புகளே! இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! இதுவே நான் வேண்டும் பிறந்தநாள் பரிசு!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பன்முகத்தன்மையையும் மக்களின் ஒற்றுமையையும் காக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதனை இந்தியத் துணைக்கண்டம் முழுதும் எடுத்துச் சென்று, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட வலியுறுத்தினேன் - முதல்வர் ஸ்டாலின்