Octopus Mating: உடலுறவுக்குப் பிறகு தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆக்டோபஸ்! - காரணமென்ன தெரியுமா?
இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆக்டோபஸ்கள் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவை முட்டையிடுவதற்கு முன்பு தங்களைத் தாங்களே சித்திரவதை செய்து சாப்பிட முயற்சிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரண்ட் பயாலஜி என்னும் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, தாய் ஆக்டோபஸ்கள் முட்டையிடும் நேரத்தில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களால் தாங்களாகவே வலியை உற்பத்தி செய்கின்றன அதை அடுத்து வலியின் காரணமாக அவைத் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றன.
977ல் வெளியான ஒரு ஆய்வு, ஆக்டோபஸின் கண்களுக்கு அருகில் உள்ள சுரப்பிகள் அவற்றின் சுய அழிவுக்கு காரணம் என்று விளக்கியது. அந்த நேரத்தில், சுரப்பிகள் ஸ்டீராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இது முட்டைகளை இடும்போது ஆக்டோபஸ்களை சித்திரவதை செய்ய தூண்டுகிறது.
தாய் முட்டையிடும் அதே நேரத்தில் மூன்று இரசாயன மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ப்ரெக்னெனோலோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவுகளில் அதிகரிப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 7-டீஹைட்ரோ கொலஸ்டிரால் அளவும் அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் இந்த இரசாயன மாற்றங்கள் பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்து ஆக்டோபஸ்கள் தங்களைத் தாங்களே வலியை உண்டாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது நம்புகிறார்கள்.இருப்பினும், ஆக்டோபஸின் உடலில் இத்தகைய கடுமையான மாற்றம் ஏற்படுவதற்கான சரியான காரணம் விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டறியப்படவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -