அருகிவரும் தோல்பாவைக் கூத்து கலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?
அருகிவரும் கலைகளின் வரிசையில் தோல்பாவைக் கூத்துக் கலையும் ஒன்று. தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தோல்பாவைக் கூத்துக் கலையை அரிதாக பார்க்க முடிகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதோல்பாவைக் கூத்துக் கலையை தன் குடும்பத்துடன் தாங்கிப் பிடித்து அதனை வாழ்வாதாரமாக கொண்டு செல்பவர் தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து லெட்சுமண ராவ் (67).
தோல்பாவைக் கூத்திற்கு ஆட்டுதோல் மூலம் பொம்மை தயார் செய்யும் முத்து லெட்சுமண ராவ்.
முத்து லெட்சுமண ராவ் 5-வது தலைமுறையாக இந்த தொழிலை செய்துவருகிறார். தனது நான்கு மகன்களுக்கும் தொழிலை கற்றுக் கொடுத்து அவர்களையும் இதே தொழிலில் ஈடுபட செய்து வருகிறார்.
தோல்பாவைக் கூத்தின் மூலம் தனது குடும்பத்தில் 20 பேர் வயிறு பிழைக்கின்றனர் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார் முத்து லெட்சுமண ராவ்.
தனது தொழிலை விரிவுபடுத்த அரசு கலைப் பண்பாட்டுத் துறை மூலம் வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது, என்று நம்மிடம் வருத்தம் தெரிவித்தார்.
தனது பேரன்களுடன் முத்து லெட்சுமண ராவ் தோல்பாவைக் கூத்து பொம்மை செய்துவருகிறார்
வீட்டில் சமையல் பணிகளுக்கு உதவி செய்யும் முத்து லெட்சுமண ராவ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -