மதுரை கம்பூர் கிராமத்தில் நடந்த புரவி எடுப்பு திருவிழா!

மதுரை மேலூர் அருகே உள்ளது கம்பூர் கிராமம். பல்வேறு சமூகத்தை சேர்ந்த இப்பகுதி மக்கள் திருவிழாவில் ஒன்றுபட்டு விழா கொண்டாடுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தை மாதம் ஆண்டுதோறும் கம்பூரில் நடைபெறும் புரவியெடுப்பு விழா மிகவும் புகழ் பெற்றதாகும்

ஆடி மாதம் தொடங்கும் இவ்விழா நடைமுறை தை மாதத்தில் 3 நாள் திருவிழாவில் முடிவுறுகிறது.
கம்பூருடன் தேனக்குடிப்பட்டி மற்றும் அய்வத்தான்பட்டி மக்களும் இணைந்து இப்புரவி எடுப்பை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆடி மாதம் இளங்காமுடி அய்யனார் கோயிலில் நடந்த ஆடி சிறப்பு அன்று திருவிழாவிற்கு திருவிலம் கேட்கப்பட்டது.
மக்கள் நேர்த்திக்கடனாக செய்ய கூறிய 120 சாமி சிலையும் மற்றும் 50 புரவிகளும் திருவிழாவிற்கு 20 நாளுக்கு முன்னர் சூளையில் வைக்கப்பட்டு சுடப்பட்டன.
நேர்த்திக்கடனாக செய்யப்பட்ட புரவிகளும் சாமிகளும் திருவிழாவில் தயாரான நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முறையான சடங்குககள் செய்யப்பட்டு குதிரை பொட்டலில் இருந்து கம்பூர் மந்தை திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
முதலில் சாமிகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் வரப்பட்டுள்ளன. இதில் கம்பூரின் முக்கிய தெய்வங்களாக விளங்கும் அம்மன், அய்யனார், பெரிய கருப்பு, சின்ன கருப்பு, வீரணன், ஈட்டிக்காரன் சாமிசிலையாக வடிக்கப்பட்டு இருந்தன.
ஈட்டிக்காரன் கூறும் அருள்வாக்கினை கேட்பதற்காக பயபக்தியுடன் கூடுவதும் திருவிழாவில் சிறப்பானது என்கின்றனர் கிராம மக்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -