CM Stalin in Spain : ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்.. ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்!
ஜனவரி 26 ஆம் தேதியில் சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்குபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே நாளில் திருச்சி அருகே பிரம்மாண்டமாக நடந்த விசிக-வின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜனவரி 27 ஆம் தேதி, அரசு பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில், “கடந்த இரு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.”என தெரிவித்து கொண்டார்.
அத்துடன் இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த பின்னர், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -