வரலாற்றில் முதல் முறையாக கீழக்கரை மைதானத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு!
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
சிறப்பாக களம் கண்ட காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 10காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார்.
போட்டியின் போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மோதிரம், தங்க நாணயங்கள் முதல் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டது.
புதிய அரங்கை சுற்றிப் பார்த்த காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
சிறந்தகாளைகளாக முதலாவது இடம் : புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரது காளைக்கு ஒரு தார் ஜீப் மற்றும் 1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.
திருச்சி அணைக்கரை வினோத் என்பவரின் காளைக்கு பைக் மற்றும் 75ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லி என்பவது காளைக்கு 50ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிகட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு மாண்புமிகு முதலமைச்சர் துவக்கி வைக்க கோலாகலமாக நடந்து முடிந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -