Pongal 2024 : பொங்கல் ஓவர்..சென்னை வந்தடைவதற்குள் திண்டாடிய வெளியூர் மக்கள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளிக்கிழமை கிளம்பினால் கூட்ட நெரிசலாக இருக்கும் என சிலர் ஞாயிற்றுக்கிழமை கிளம்பினர். இருப்பினும், கடந்த வாரம் முதல் இந்த வாரத்தின் தொடக்கம் வரை நெடுஞ்சாலைகள் நிரம்பி காணப்பட்டண.
தொடர் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் செலவழித்து, விடுமுறை முடிந்தவுடன் சென்னைக்கு திரும்ப கிளம்பிய பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்தனர்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஆம்னி பேருந்துகள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி சென்று கோயம்பேடு சென்றனர்.திருவான்மியூர், அடையாறு, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் வண்டலூரில் இறங்கி மாற்று பேருந்துகள் மூலம் சென்றனர்.
வீட்டிற்கு செல்ல பேருந்து கிடைக்குமா? ஆட்டோ கிடைக்குமா என்ற ஏக்கம் பலரது முகத்தில் தெரிந்தது. மாற்றும் பேருந்துகள் கிடைக்கும் வரை, மக்கள் பலர் புலம்பினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -