Pongal 2024 : உள்நாட்டினர் முதல் வெளிநாட்டினர் வரை அனைவரையும் ஈர்த்த மாமல்லபுரம்!
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நாளில் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்தவகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் மக்கள் குவிந்தனர்.
கடற்கரை செல்லும் வழியெங்கும் எக்கசக்கமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. சிற்றுண்டி கடைகள், பொம்மைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.
அத்துடன் குழந்தைகள் விளையாடுவதற்கு ரங்கராட்டினம், டிஸ்கோ கார் போன்ற பொழுதுபோக்கும் அம்சங்களும் காணப்பட்டன.
வருடத்தின் அனைத்து நாட்களிலும் வெளிநாட்டவரை ஈர்க்கும் மாமல்லபுரம், அவர்களை காணும் பொங்கலான நேற்றும் ஈர்க்க தவறவில்லை
மாமல்லபுரத்தின் கழுகு பார்வை காட்சிதான் இது. இதை பார்த்தாலே நேற்று எவ்வளவு கூட்டம் கூடியது என்பதை தெரிந்துக்கொள்ளமுடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -