International Tiger Day Photos: சர்வதேச புலிகள் தினம்: 'வனங்களின் தளபதி' புலிகள் ஸ்பெஷல் ஆல்பம்...!
புலிகளிலே மிகவும் சிறியது சுமத்ரன் வகை புலிகள். இந்தோனிஷியாவில் சுமத்ரன் புலிகளை வேட்டையாடுவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தோனிஷியாவின் ஜாவா தீவுகளில் காணப்பட்ட ஜாவன் புலிகள் கடந்த 1970ம் ஆண்டிற்கு பிறகு அழிந்துவிட்டது.
சைபீரியன் புலிகள்தான் புலிகள் வகையிலே மிகப்பெரியது. இந்த வகையில் ஆண் புலிகள் 300 கிலோ வரை எடை கொண்டது ஆகும்.
பாலி தீவுகளில் காணப்பட்ட இந்த பாலி புலிகள் கடந்த 1940ம் ஆண்டு காலகட்டங்களிலே அழிந்துவிட்டது.
உலகின் அழிந்து வரும் நிலையில் உள்ள தென்சீனப் புலிகள் தற்போது 47 மட்டுமே உயிருடன் உள்ளது.
துருக்கி, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் காணப்பட்ட காஸ்பியன் புலிகள் 1970 காலகட்டங்களிலே அழிந்துவிட்டது.
இந்தோ-சீன புலிகள் வங்கப்புலிகளுடன் ஒப்பிடும்போது குள்ளமாகவும், குறுகலான உடலமைப்புடனும் காணப்படும்
இந்தோனிஷியா புலிகளைப் போன்றே உருவத்தில் உள்ள மலயன் புலிகள், அவற்றை காட்டிலும் சற்று உருவத்தில் சிறியதாக இருக்கும்.
வெள்ளை நிறப் புலிகள் வங்கப்புலிகளின் வகையில் ஒரு கலப்பினமாக உருவாக்கப்பட்டது.
வங்கப்புலிகள் இந்தியா, பூடான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -