யு.பி.ஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படுமா? உண்மை நிலவரம் என்ன?
யு.பி.ஐ மூலம் குகூள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட செயலிகளின் வழியாக 2,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவிகிதம் பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ) சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டுமா? வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஏன் என்றால், யு.பி.ஐ பண பரிவர்த்தனை இப்போதும் அவர்களுக்கு கட்டணம் இன்றிதான் வழங்கப்பட்டு வருகிறது.
என்.பி.சி.ஐ வெளியிட்ட அறிவிப்பின்படி, இரு தனிநபர்களுக்கு இடையேயும், தனிநபர், வர்த்தகருக்கு இடையேயும் நடக்கும் பண பரிவர்த்தனைகளுக்கு பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போ கட்டணம் செலுத்த வேண்டியது யார்? குகூள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் வாலட்களை பயன்படுத்தி வர்த்தகரின் க்யூஆர் கோடு மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 1.1 சதவிகித பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும்.
குறிப்பிட்ட வர்த்தகர்களுக்கு குறைந்த அளவிலான 1.1 பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும். வாடிக்கையாளர்கள், இந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால், இது தொடர்பான வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.
இந்த நடவடிக்கையால் பலன் யாருக்கு? யு.பி.ஐ மூலம் இயங்கும் செயலிகளில் எந்த வங்கி கணக்கையும் பயன்படுத்தும் சாய்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ரூபே, கிரெடிட் கார்டு என எதை வேண்டினாலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
இது தொடர்பான செய்தி வெளியாகி மக்களை குழுப்பி வந்த நிலையில், குகூள் பே, பேடிஎம் ஆகியவை விளக்கம் அளித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -