Toycathon 2021 Grand Finale: ரூ. 50 லட்சம் பரிசை வெல்லப்போகும் மாணவர் யார்? பிரதமர் சொன்னது என்ன?
டாய்கத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.
இந்திய பொம்மை சந்தையின் மதிப்பு ரூ.1.5 பில்லியன் அமெரிக்க டாலர். பெரும்பாலான பொம்மைகளை நாம் இறக்குமதி செய்கிறோம். இந்திய கலச்சார திறனைப் பயன்படுத்தி புதுமையான பொம்மைகளை தயாரிக்க டாய்கத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது
நாடு முழுவதும் இருந்து சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்தனர். ஜூன் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, உள்ளூர் மலிவு விலை பொருட்களை பயன்படுத்தி இந்திய மற்றும் உலக சந்தைக்கு தரம் வாய்ந்த புதிய வகை பொம்மைகளை உருவாக்குவதில் டாய்கத்தான் கவனம் செலுத்துகிறது
ஜூன் 26-ஆம் தேதி டாய்கத்தான்-2021 போட்டியின் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்படும். வெற்றி பெரும் நபருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படும்