Sidhu Moosewala : மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா அறிய புகைப்படங்கள்!
பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சித்து மூஸ்வாலா பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மான்சா சார்பில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த மாதம், சித்து மூஸ்வாலா தனது சமீபத்திய பாடலான 'பலி ஆடு' பாடலில் ஆம் ஆத்மி கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் குறிவைத்து சர்ச்சையை கிளப்பினார்.
பாடகர் தனது பாடலில் ஆம் ஆத்மி ஆதரவாளர்களை 'கதர்' (துரோகி) என்று அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தேராஸின் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது.
பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.